ஆன்லைன் சூதாட்டம் விளையாடினால் 3 மாதம் சிறை- 5000 ரூபாய் அபராதம்
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். வரும் 17ம் தேதி துவங்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் நிரந்தர தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது
தண்டனை விவரம்:-
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்
ஆன்லைன் விளையாட்டிற்கும் எதிரான புகார்களை பெற்று தீர்வு காண்பதற்கும்,எந்தவொரு நபரையும் நேரில் அழைத்து விசாரிக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனையில் நீதிமன்றம் தடைவிதிக்க முடியாது எனவும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மேல்முறையீட்டு ஆணையம் அமைக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்