Breaking News

பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200 அன்பளிப்பு - வேலூர் மாநகராட்சி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் ரூ.200 அன்பளிப்பு அளிக்கப்படும் என வேலூர் மாநகராட்சி அறிவித்துள்ளது



வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016-ன் கீழ், வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து அளிக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் காலிமனைகளில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. 

அதன்படி, 

வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100 அபராதம் 

வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதம்

வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் 

மேலும் தெருக்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையை கொட்டினால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும்.

வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் ரூ.100 அபராதம் 

வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும். 

அதேநேரம், குப்பையை தெருக்களில் கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு அன்பளிப்பாக ரூ.200 அளிக்கவுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback