தருமபுரியில் +2 முடித்த பெண்களுக்கு 15ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!!
தருமபுரியில் +2 முடித்த பெண்களுக்கு 15ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!!
தருமபுரியில் வரும் 15ஆம் தேதி டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க பிளஸ் 2 முடிந்த பெண் வேலைநாடுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தற்போது பிரத்யேகமாக TATA ELECTRONICS தனியார் துறை நிறுனம் இலவசமாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.இம்முகாமில் 18 முதல் 20 வயதிற்குள் உள்ள 12ஆம் வகுப்பு படித்த (2020, 2021, 2022) ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற பெண் வேலைநாடுகளை மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இம்முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.16,550/- வழங்கப்படும். மேலும், தங்கும் வசதி (விடுதி) இலவசமாக அளிக்கப்படும்.
மனுதாரர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ் - 12ஆம் வகுப்பு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.இது ஒரு இலவசப்பணியே ஆகும்.இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத்துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முக தேர்வு அனுப்பப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.
ஆகவே மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பம் உள்ள பெண் மனுதாரர்கள் அனைவரும் வரும் 15.10.2022 அன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தருமபுரி அரசு கலைக்கல்லுரியில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags: வேலைவாய்ப்பு