தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அவர்கள்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது என அறிவித்த அவர் துணை நிதிநிலை அறிக்கை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளுக்கான இருக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டமன்ற மரபுப்படி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பேரவையில் அமர வைக்கப்படுவர் என கூறினார் மேலும் எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்