தரை பால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 16 சக்கர ராட்சத லாரி...! வைரல் வீடியோ video lorry falls into river in andhra pradesh
ஆந்திரா வெள்ளத்தின் போது தரைப்பாலத்தை கடக்க முயன்ற 16 சக்கர ராட்சத லாரி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புக்கராய சமுத்திரம் ஏரி சமீபத்தில் பெய்த மழை காரணமாக நிரம்பி வழிகிறது. இதனால் ஏரியில் இருந்து வெளியாகும் தண்ணீர் சாலைகளில் 3 அடிக்கும் மேல் பாய்ந்து ஓடியது.தரைப்பாலத்தில் 3 அடிக்கு மேல் இருந்த தண்ணீர், இரண்டு அடியாக குறைந்ததால், இருபுறமும் தேங்கியிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் தரைப்பாலம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டன.இந்த நிலையில் காலை 10 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை எண்.544 டியில் அனந்தபூரிலிருந்து தாடிபத்ரி நோக்கிச் சென்ற 16 சக்கர கலவை இயந்திரத்துடன் கூடிய ராட்சத லாரி ஒன்று தரைப்பாலம் ஒன்றின் மீது வழிந்து ஓடும் காட்டாற்று வெள்ளத்தை கடந்து முயன்றது.
அப்போது வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட லாரி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் லாரியிலிருந்து இறங்கி நீந்தி உயிர் தப்பினர். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ