Breaking News

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 10 ஆயிரம் உதவிதொகையுடன் படிப்பு , படிப்பு முடித்தவுடன் hcl நிறுவனத்தில் வேலை, லட்சகணக்கில் சம்பளம் உடனே விண்ணப்பியுங்கள் hcl tech bee

அட்மின் மீடியா
0

 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கவனத்திற்கு...

2021/2022 ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் இணைந்து வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டம் நடத்தப்படவுள்ளது!


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

"2021 அல்லது 2022 ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் இணைந்து வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டம்"

2021-2022 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு. HCL நிறுவனம் பயிற்சியோடு கீழ்கண்ட பணி வாய்ப்புகளை வழங்குகின்றது. 

தமிழக அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அரசுப் பள்ளி மாணவர்கள் 2,000 நபர்களுக்கு HCL Techbee "Early Career Program"க்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் வழங்குகின்றது.

இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு:தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் பயிற்சியோடு HCL Technologies-ல் கீழ்க்கண்ட முழுநேர பணிவாய்ப்பை வழங்குகின்றது.

Software Developer

Analyst, Design Engineer Data Engineer

Support & Process Associate

Service Desk and DPO

Internship பயிற்சியின் போது 7வது மாதம் முதல், மாதம்தோறும் ரூபாய் 10,000/ உதவித்தொகையை பெறலாம்.

பணியில் சேர்ந்தவுடனே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூபாய் 1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை (பணிநிலைக்கு ஏற்றாற்போல்)

HCL Technologies - ல் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியை துவங்குவதற்கு BITS Pilani, Amity மற்றும் SASTRA பல்கலைக்கழகங்களில் வாய்ப்பினை பெற்றுத் தருகின்றது. மேலும் அவர்களின் கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை HCL Technologies நிறுவனம் வழங்குகின்றது. மேலும் இத்திட்டமானது மாணவர்கள் சிறுவயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை துவங்க வாய்ப்பளிக்கின்றது.

மாநிலம் முழுவதிலும் இந்த HCL "Techbee"திட்டத்தின் தேர்வு முகாமினை அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை, சென்னை, மதுரை. திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு (தகுதியுள்ள மாணவர்களை ) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.


12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 10 ஆயிரம் உதவிதொகையுடன் படிப்பு , படிப்பு முடித்தவுடன் வேலை உடனே விண்ணப்பிக்கலாம்

கல்விதகுதி:

2020/2021-இல் கணிதம் /வணிக கணிதத்துடன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற இந்தியாவில் வசிக்கும் பிரஜை

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 

பயிற்சி

வேலைகளில் Software Developer, Analyst, Design Engineer, Data Engineer Support & Process Associate ஆகியவை உள்ளடங்கும்.

பயிற்சி முடித்தவுடன்


மாணவர்கள் பயிற்சியை முடித்தவுடன் HCL கம்பெனியில் முழு-நேர வேலையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

வேலையைப் பொருத்து அவரவர் வருடம் 1.7 லட்சம் முதல்  22 இலட்சம் வரை சம்பாதிக்கத் தொடங்குவார்கள்.

பயிற்ச்சியின் போது 

10,000 உதவித் தொகையுடன் இன்டர்ன்ஷிப் உள்ளது. 

வேலை செய்யும்போதே BITS Piani மற்றும் SASTRA University- யில் பட்டப்படிப்பு படிக்கலாம்.

பதிவு செய்ய: https://registrations.hcltechbee.com/

இன்றே பதிவுசெய்து உங்கள் எதிர்காலத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

hcl company

hcl technologies ltd

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback