10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஊர்க்காவல் படை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்
ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 67 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல் துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,
ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 67 (ஆண் 58, பெண் 9) பணியிடங்களை நிரப்ப 20 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்குட்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நல்ல உடற்தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் (Online) மூலமாகவோ அல்லது ஈரோடு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஈரோடு மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகம், பன்னீர்செல்வம் பார்க், ஈரோடு என்ற முகவரியிலோ காலை 10 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வரும் 16ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், தகவலுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்கள் மற்றும் வலைதள முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி எண்கள்:
94981 14806
83000 19494
மின்னஞ்சல் முகவரி:-
மேலும் விவரங்களுக்கு:-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScubnCH0Zk5vfBB8M2rhUDw06oFQT8zxgnp-to_7E0MqIa0bA/viewform
Tags: வேலைவாய்ப்பு