Breaking News

அமீரகத்தில் பசித்தவர்கள் இலவசமாக உணவு வழங்கும் இயந்திரம் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

பசியுடன் ஒருவரும் இருக்ககூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் துபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும் வெண்டிங் இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது.




ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர் இவர்கள் குடும்பத்தினருக்கு பணத்தை சேமிப்பதற்காக  பலர் மூன்றுவேளை சாப்பிடாமல் பட்டினியுடன் நாட்களை கழிக்கின்றனர்.

இந்நிலையை மாற்ற வேண்டும் என பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.அதன் முதல் முயற்ச்சியாக அமீரகத்தில் இயங்கி வரும் அவ்காஃப் அண்ட் மைனர்ஸ் அஃபைர்ஸ் ஃபவுண்டேஷன் ன் கீழ் உள்ள முகம்மது பின் ரஷீத் குளோபல் சென்டர் ஃபார் எண்டோமெண்ட் கன்சல்டன்ஸியானது ஆதரவற்ற குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களின் பசியைப் போக்குவதற்காக இலவசமாக பிரட் வழங்குவதனை நோக்கமாக கொண்டு அனைவருக்கும் ப்ரட் (Bread for All) திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.


துபாயில் இலவச உணவு அளிக்கும், 'வெண்டிங் மிஷின்' எனப்படும், தானியங்கி இயந்திரங்களை நகரின் பல்வேறு பகுதிகளிலும் அவர் நிறுவியுள்ளது

Bread for All எனும் இந்த திட்டத்தின் ஸ்மார்ட் மெஷின்கள் 

1.Warqa aswaaq Mall Al Warqaa 2 - Algeria St - Dubai 

2.Nad Al Sheba aswaaq Mall Nad Al Sheba 

3.Umm Suqeim aswaaq Mall Umm Suqiem 3 

4.Barsha aswaaq Mall, Al Barsha South First, Dubai 

5.Barsha Mart aswaaq Mall, Al Barsha South, Dubai 

6.Mizhar aswaaq Mall Al Khortum St. Mizhar, Dubai 

7.Nad Al Hammar aswaaq Mall Nad Al Hamar, Dubai 

8.Mirdiff aswaaq Mall Mirdiff, Street 71- Dubai 

9.Al Quoz aswaaq Mall Al Quoz 2, Near Meydan Dubai 

10.Badaa aswaaq Mall - Al Wasl Rd - Dubai

ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் அமைக்கப்பட்டுள்ளது

இதில், அரபி ரொட்டி மற்றும், 'பிங்கர் ரோல்' ஆகிய இரண்ட வகை உணவுகள், சுடச்சட தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கப்படுகின்றன.

உணவு தேவைப்படும் எந்தவொரு நபரும் இந்த இயந்திரத்தில் "ஆர்டர்" பட்டனை அழுத்தினால் உடனடியாக ப்ரட் தயார் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது

இந்த இலவச உணவு திட்டத்துக்கு தனிநபர்களும் நன்கொடை அளிக்கலாம் என துபாய் அரசு தெரிவித்துள்ளது


Dubai Now ஆப் மூலமாக நன்கொடை அளிக்கலாம் 

மேலும் 10 திர்ஹம் நன்கொடைக்கு 3656 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம்
50 திர்ஹம் நன்கொடைக்கு 3658, என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம்
100 திர்ஹம் நன்கொடைக்கு 3659, என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம்
500 திர்ஹம் நன்கொடைக்கு 3679 என்ற எண்ணுக்கு SMS  மூலமாகவோ நன்கொடை அளிக்கலாம் 

மேலும் www.mbrgcec.ae என்ற இணையதளம் மூலம் நன்கொடைஅளிக்கலாம் 


வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=lhQQ4X_Q9K0



https://mbrgcec.ae/en/bread-for-all

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback