Breaking News

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய நீதிமன்ற உத்தரவை எதிர்த்து திருமாவளவன் மனுதாக்கல்

அட்மின் மீடியா
0

எதிர்வரும் அக்டோபர் 2ம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றல் திருமாவளவன் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதியன்று 51 இடங்களில்  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த தமிழக போலிசார் அனுமதி அளிக்கவில்லை எனவே அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்கள் இந்த வழக்கில் கடந்த 22-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அவர்கள் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி, வரும் 28-ம் தேதிக்குள் போலீசார் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது, மேலும் அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது. எனவே ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அனுமதி அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback