அதிமுக பொதுகுழு கூட்டம் செல்லும் -தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக பொதுகுழு கூட்டம் செல்லும் -தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இதன் காரணமாக கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
அதிமுகவை மக்கள் இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார்.அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக ஜெயலலிதா மாற்றினார். 30 ஆண்டுகள் அதிமுகவை கட்டிக்காத்து பல்வேறு நலத்திட்டங்களை ஜெயலலிதா வழங்கினார்.எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகளால், அதிமுகவிற்குள் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. மனக் கசப்புகளை எல்லாம் மறந்து அதிமுகவின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் எங்களுக்கு இல்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அவை தொலையட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும். கட்சிக்கு உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் இணைக்கலாம். யாராக இருந்தாலும் என்ற வார்த்தையில் சின்னம்மாவும் , டிடிவி தினகரனும் இருக்கின்றனர் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்கள்
அந்த மேல்முறையீட்டு வழக்கினை விசாரனை செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினார்கள்.அதில் அதிமுக பொதுகுழு கூட்டம் செல்லும் -தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
தனி நீதிபதி உத்தரவு ரத்தானதால் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லும்!
Tags: அரசியல் செய்திகள்