டிவிட்டர் ஸ்பேஸில் இன்று இரவு 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகின்றார்
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றவுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ட்விட்டர் வரலாற்றில் முதன்முறையாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின், திராவிடர் கழகம் நடத்தும் ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.
சமூக சீர்திருத்தவாதியுமான பெரியார் மற்றும் திமுக நிறுவனரும் மறைந்த முதலமைச்சருமான அண்ணாதுரை ஆகியோரின் பிறந்தநாள் செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.அதே மாதத்தில் திமுகவும் தொடங்கப்பட்டது. இந்த சமயத்தில் ‘திராவிட மாதம்’ கொண்டாடுவதற்கு செப்டம்பர் மாதம் பொருத்தமான மாதம் என்பதை திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு உணர்ந்து திராவிடத்தை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி திமுக தகவல் தொழில்நுட்ப அணி TwitterSpaces-ல் திராவிடத்தை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.
இதில், திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். அந்தவகையில், செப்டம்பர் மாதம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றவுள்ளார்.
இந்த நிலையில், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நடத்தும் ‘திராவிட மாதத்தை’ நாளை இரவு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டர் ஸ்பேஸில் பங்கேற்று நிறைவு செய்து வைக்கிறார்
டிவிட்டர் ஸ்பேஸ் அறிவிப்பு
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்