Breaking News

ரிசார்ட்டில் பணிபுரிந்து வந்த 19 வயது பெண் கொலை வழக்கில் உத்தராகாண்ட் மாநில மூத்த பா.ஜ.க. தலைவர் மகன் கைது-ரிசார்ட் இடிப்பு

அட்மின் மீடியா
0

இளம்பெண்ணை கடத்தி கொன்ற வழக்கில் உத்தராகாண்ட் மாநிலத்தின் மூத்த பா.ஜ.க. தலைவரான வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா முதல் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.




உத்தரகாண்ட் மாநிலத்தின் பாவரி மாவட்டத்தில் யம்கேஷ்வர் தொகுதியில் ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது அப்பகுதி பாஜக தலைவராக உள்ள வினோத் ஆர்யாவின் மகனான புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமானதாகும். இதில், வீட்டு வறுமையின் காரணமாக 19 வயதுடைய அங்கிதா பண்டாரி என்ற இளம் பெண் ஒருவர் ரிஷப்ஷனிஸ்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 18ம் தேதி தனது மகளை காணவில்லையென  பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரை விசாரனை செய்த காவல்துறையினர் மந்தமாக செயல்பட்டதாக தெரியவந்ததை அடுத்து  உள்ளூர் மக்களின் அழுத்தம் காரணமாக ரிசார்ட்டின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்தபோது சில உண்மைகள் வெளிவந்துள்ளன. அதாவது சம்பவம் நடந்த அன்று இளம்பெண் ரிசார்ட்டை விட்டு வெளியே வரவில்லை. எனவே முழு சந்தேகமும் ரிசார்ட் மீது திரும்பியது. 

இதனையடுத்து ரிசாரட் ஊழியர்களிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் தகவல் வந்தது புல்கித் ஆர்யா  அப்பெண்னை கடத்தி சென்றதாக ஊழியர்கள் வாக்குமூலம் அளித்தார்கள் இதனையடுத்து நேற்று (செப்.,23) ரிசார்ட் ஓனரான பாஜக தலைவரின் மகன் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யாவும், மேனேஜர்கள் சவுரப் பாஸ்கர் மற்றும் அங்கித் குப்தா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பவ்ரி கர்வால் போலீஸ் அதிகாரி கூறியிருக்கிறார்.

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் குற்றங்கள் நடைபெறும்போது அம்மாநில அரசு குற்றவாளிகளின் குடியிருப்புக்களை புல்டோசர் கொண்டு இடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது

இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் மக்கள் 'புல்டோசர் நீதி' வேண்டும் என வலியுறுத்தியதையடுத்து ரிசார்டை இடிக்க முதலமைச்சர் தாமி உத்தரவையடுத்து ரிசார்ட் நேற்றிரவு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் இளம்பெண்ணின் உடல் கிடைக்காத நிலையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback