Breaking News

வாரணாசியின் கியான் வாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு!! பலத்த பாதுகாப்பு 144 தடை உத்தரவு அமல்

அட்மின் மீடியா
0

வாரணாசியின் கியான் வாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு 

மசூதிக்குள் இந்து வழிபாட்டு அடையாளங்கள் இருந்ததாக கூறி மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தியது 

சர்ச்சைக்குரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பலத்த பாதுகாப்பு

144 தடை உத்தரவு அமல் 

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதிக்கும் இடையே சுற்றுச்சுவர் ஒன்று உள்ளது. இந்த சுவற்றில் சிங்கார கெளரி அம்மன் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிலைகள் அமைந்துள்ளன.

இந்த நிலையில், கோயிலின் மண்டபத்தில் அமைந்துள்ள சிங்கார கெளரி அம்மனுக்கு தினந்தோறும் பூஜை நடத்த அனுமதி அளிக்கக்கோரி, டெல்லியைச் சேர்ந்த பெண்கள் சிலர் கடந்த 2021ஆம் ஆண்டு வாரணாசி மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த மாவட்ட சிவில் நீதிமன்றம் மசூதியில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது. 

இந்த ஆய்வுப்பணியின் போது இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் உள்ள குளத்தில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனால் ஞானவாபி மசூதி பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. அப்பகுதிக்குள் ஆட்கள் நுழைய தடைவிதித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற மசூதி நிர்வாகம்  மசூதியில் இருப்பது சிவலிங்கம் இல்லை அது குளத்துக்குள் இருக்கும் செயற்கை நீரூற்று அமைப்பு என்றும் அக்குளம் மசூதிக்கு வருபவர்கள் தொழுகைக்கு முன் தூய்மைப்படுத்திக்கொள்வதற்கான குளம் என்று மசூதி தரப்பு தெரிவித்தது.

சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டும் என்று வாரணாசி மாவட்ட கலெக்டருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஒரு நேரத்தில் 20 பேருக்கு மட்டுமே தொழுகை செய்ய அனுமதி என்ற மாவட்ட கோர்ட்டின் உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்யப்பட்ட ஐகோர்ட் அமைத்த குழுவின் கமிஷனராக இருந்த வழக்கறிஞர் அஜய் மிஸ்ராவை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மசூதியில் ஆய்வு செய்த விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் மீடியாக்களில் கசிந்ததை அடுத்து அவரை நீக்கி வாரணாசி ஐகோர்ட் உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வாரணாசி மாவட்ட நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ஞானவாபி மசூதி வழக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷா அமர்வு முன்பு  விசாரணை நடைபெற்றது

4 மனுதாரர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் உள்பட வெறும் 23 பேர் மட்டுமே விசாரணை நடைபெற்ற நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஞானவாபி மசூதி விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட வாரணாசி நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback