பொங்கல் பண்டிகைக்கு 12ம் தேதி முதல் ரயில் முன்பதிவு செய்யலாம்
அட்மின் மீடியா
0
ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன் டிக்கெட் எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.இந்நிலையில் 2023 ம் ஆண்டு ஜனவரி 14 ம் தேதி அன்று போகிப் பண்டிகை துவங்கி 17ஆம் தேதி வரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது .
இதற்காக சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக அல்லது ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவே பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் முன்கூட்டியே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.அதாவது, ஜனவரி 10ம் தேதி பயணிக்க விரும்புவோர், வரும் 12ம் தேதியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள்