கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 01.09.2022 பள்ளி விடுமுறை அறிவிப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
தொடர் கன மழை காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
கனமழை காரணமாக இன்று நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மட்டும் நடத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
கனமழை காரணமாக இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
குறிப்பு:
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்