சிறையில் இருந்து புல் புல் பறவையில் பறந்து செல்வார் சாவர்க்கர் கர்நாடக பாடபுத்தகத்தில் சர்ச்சை
கர்நாடக மாநிலத்தில் 8ம் வகுப்பு கன்னட மொழிப் பாடத்தில் சாவர்க்கர் சிறையில் இருந்தபோது புல் புல் பறவை மீது அமர்ந்து தாய்மண்ணுக்கு வந்து சென்றார் என இடம் பெற்றுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படவைத்துள்ளது.
கர்நாடக மாநில 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது சிறை அறையில் சிறிய துளை கூட கிடையாது. ஆனால் அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது அமர்ந்து தினமும் தாய் மண்ணிற்கு சாவர்க்கர் வந்து செல்வார்" என பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவலால் சர்ச்சை எழுந்துள்ளது.
பாஜவினர் சாவர்க்கர் மீதான பக்தியின் உச்சக்கட்ட கட்டுக்கதை இது என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்