Breaking News

விரைவில் ஆவின் குடிநீர் - அமைச்சர் நாசர் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும்.இது ஆவின் எனும் வணிகப்பெயரில் அழைக்கப்படுகிறது. இந்நிறுவனம் தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது



ஆவின் நிறுவனம் சார்பில் பால், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் ,பால்கோவா என பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆவின் விற்பனையை மேம்படுத்தவும், இதனை விரிவுபடுத்தவும் தமிழக அரசு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தது.இந்நிலையில்அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை தயாரித்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

மேலும் ஆவின் வருவாய் அதிகரிக்க பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback