பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை வீடியோ
பறக்கும் ஹெலிகாப்டரில் புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்து யூடியூப்பர் ஒருவர் பலரையும் வியக்க வைத்துள்ளார்.
நெதர்லாந்தை சேர்ந்த உடற்பயிற்சியாளரும், யூடியூபருமான ஸ்டான் பிரவுனி என்பவர் பறக்கும் ஹெலிகாப்டரில் ஒரு நிமிடத்தில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டான் பிரவுனி, அர்ஜென் ஆல்பர்ஸ் ஆகியோர் யுடியூப் சேனலை நடத்தி வருகிறார்கள்.
ஹெலிகாப்டர் குறிப்பிட்ட அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அடிப்பகுதியில் உள்ள கம்பியை பிடித்து கொண்டு புல்-அப்ஸ் செய்தனர்.முதலில் அர்ஜென் ஆல்பர்ஸ், ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார்.
அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார். அவர் ஒரு நிமிடத்தில் 25 முறை புல்-அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தார்.
வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ