Breaking News

கனமழை எச்சரிக்கை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 05-08-2022 விடுமுறை

அட்மின் மீடியா
0

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை 05.08.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கனமழை காரணமாக இன்று 05.08.2022 கோவை மாவட்டம்  வால்பாறை தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு



குறிப்பு: 

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback