Breaking News

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதுக்கு எதிரான வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டது அதில்

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இபிஎஸ் தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவு மேலும்  ஒரு மாதத்திற்கு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது என  உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். 

அதே நேரம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.பொதுக்குழுவின் போது கட்சி அலுவலகத்தில் வன்முறை நடந்ததால் வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். 

காவல்துறை தரப்பில் பொது அமைதி, பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியமாக கருதப்படுகிறது என்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் சீல் வைக்கப்பட்டது எனஉயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகம் சீல் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருதரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது. எனவே, அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று இபிஎஸ் தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவுவிட்டடது சென்னை உயர்நீதி மன்றம் மேலும்  ஒரு மாதத்திற்கு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது என  உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback