Breaking News

விண்வெளி பிரபஞ்சத்தின் தெளிவான போட்டோவை வெளியிட்ட நாசா புகைப்படங்கள் இணைப்பு

அட்மின் மீடியா
0

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்த பிரபஞ்சத்தின் முதலாவது புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு பெருமை தெரிவித்துள்ளார்.




இந்த புகைப்படம் மூலமாக விண்வெளியில் ஆயிரக்கணக்கான பால்வழி மண்டலங்கள் இருப்பது தெரிகிறது. உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு மையமாக நாசா ஆய்வு மையம் திகழ்கிறது.


ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி என்பது உலகின் முதன்மையான விண்வெளி அறிவியல் ஆய்வகமாகும். 


பெருவெடிப்புக்குப் பிறகு என்ன நடந்தது, ,விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் மனிதர்களை உருவாக்கியது, முதல் நட்சத்திரம் எப்படி உருவானது என்பதை கண்டறியும் நோக்கத்துடன் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியுள்ளது.



இது கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பாவின் ஸ்பேஸ்போர்ட்டின் ஏரியன் 5 ராக்கெட்டின் மூலம் ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கியை உருவாக்க 75 ஆயிரம் கோடி ரூபாயை நாசா செலவளித்துள்ளது.



நாசாவின் புதிய ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் இதுவரை யாரும் கண்டிராத பிரபஞ்சத்தின் அரிய புகைப்படத்தை பிடித்துள்ளது. பிரபஞ்சத்தை மிக சிறந்த முறையில் மிக சிறந்த ரெசல்யூசனில் பிடிக்கப்பட்ட படம் இதுவே என்று நாசா தெரிவித்துள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback