ஐந்து வயது சிறுவனை கட்டையால் அடிக்கும் டியூசன் ஆசிரியர் வைரல் வீடியோ
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தனருவா என்ற பகுதியிலுள்ள டியூசன் சென்டரில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
டியூசனில் ஒரு மாணவன் படிக்காமல் சிரித்து பேசியபடி இருந்ததால் ஆத்திரமடைந்த சோட்டு என்கின்ற ஆசிரியர் சிறுவனை தான் கையில் வைத்திருந்த பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பிரம்பு உடைந்து போகின்றது,
சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளான் அந்த வீடியோவில், சிறுவன் தன்னை அடிக்க வேண்டாம் என்று ஆசிரியரிடம் அழுது கெஞ்சுகின்றான் எனினும் விடாமல் தனது கைகளால் சிறுவனின் முகத்தில் மாறி மாறி குத்துகின்றார். இதையடுத்து சிறுவன் மயங்கி விழுந்ததை பார்த்து வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர் சப்தத்தை கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் வகுப்புக்கு சென்று மயக்கமடைந்திருந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், ஆசிரியர் சோட்டுவையும் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர் ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டியூசனில் சிறுவனை ஆசிரியர் தாக்கும் வீடியோவை அங்கிருந்த ஒரு மாணவன் செல்ஃபோனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளான் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/rajankumarmdb95/status/1544055010002100225
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ