Breaking News

அந்தமானில் இன்று ஒரேநாளில் பலமுறை நிலநடுக்கம்!

அட்மின் மீடியா
0
அந்தமானில் இன்று காலை முதல் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 

 

அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை 11:05:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 11.05 க்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆகப் பதிவானது. அடுத்ததாக பிற்பகல் 1.55 மணிக்கு 4.5 ஆகவும், 2.06 மணிக்கு 4.6 ஆகவும் பதிவாகியுள்ளது.இதைத் தொடர்ந்து 2.37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ஆகவும் அடுத்து 3.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது.3.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 256 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பிற்பகல் 3.25 மணிக்கு போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 205 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 4.6 என்ற அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை உயிரிழப்புகள் குறித்து ஏதும் இதுவரை தகவல் இல்லை.



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback