Breaking News

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த குற்றச்சாட்டில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை - முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 ரூ.9000 கோடி முறைகேடு விவகாரத்தில் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்த வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



இந்திய நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி அளவில் கடன் மோசடி செய்து 2016ஆம் ஆண்டில் இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டன் நாட்டில் அவர் தஞ்சம் அடைந்துள்ளார் விஜய் மல்லையா 

இந்நிலையில்  விஜய் மல்லையாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கி வழக்கு தொடர்ந்த நிலையில், கடனை திருப்பி தராமல் விஜய் மல்லையா பண பரிவர்த்தனை செய்யக்கூடாது என 2017ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஆனால்  நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறி அவர் ரூ.317 கோடி பண பரிவர்த்தனை செய்ததாக ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கில் விஜய் மல்லையா நீதிமன்ற உத்தரவை மீறி  பண பரிவர்த்தனை செய்தது தவறு என கூறி அவரை குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்தது. 

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி விஜய்மல்லையா வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தண்டனை விவரத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது அதன்படி நீதிமன்ற அவமதிப்பிற்காக 4 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது

கடனாகப் பெற்ற 40 மில்லியன் டாலர் தொகையை 8% வட்டியுடன் நான்கு வாரங்களுக்குள் விஜய் மல்லையா மற்றும் அவரது மகன் செலுத்த வேண்டும் என்றும் தவறினால் சொத்துக்கள் முடக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback