துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு. துப்பாக்கியால் சுடப்பட்ட வீடியோ
அட்மின் மீடியா
0
துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வயது 67 உயிரிழந்தார்
ஜப்பானில் உள்ள நாரா நகரின் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசத்தொடங்கிய சில நிமிடங்களிலேயே மர்ம நபர் ஒருவர் அவர் மீது பின்னால் இருந்தவாறு துப்பாக்கியால் சுட்டார். உடனடியாக அபேவுக்கு பாதுகாவலர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஷின்சோ அபேவின் மார்பில் பாய்ந்தகுண்டு இதயத்தில்துளையிட்டதன் காரணமாக இதயத்தில் அதிக அளவு ரத்த போக்கு ஏற்பட்டதாம். இதயம் மற்றும் நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாகத்தான் ஷின்சோ அபே உயிரிழந்தார்
மேலும் ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்ட நபரைஉடனடியாக காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட அந்த நபர் யமகாமி டெட்சுயா (41), கடல்சார் பாதுகாப்பு படையின் முன்னாள் வீரர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஷின்சோ அபே சுடப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.