ஆன்லைனில் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் உடனடியாக திரும்ப கிடைக்கும்- ஐ.ஆர்.சி.டி.சி
ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் தாமதம் இன்றி திரும்ப கிடைக்க ஐ.ஆர்.சி.டி.சி ஐபே வசதியை பயன்படுத்தலாம்.
ரயில் பயணத்துக்கு 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணியர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ரயில் பயணம் ரத்து செய்ய விரும்புவோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்திலேயே ரத்து செய்து பணத்தை திரும்ப பெறலாம்.
இதில், மற்ற வங்கிகளின் சார்பில் செய்யப்படும் கட்டண பரிவர்த்தனையை காட்டிலும், ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு சொந்தமான 'ஐபே' வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து, ரத்து செய்தால், பணம் தாமதம் இன்றி கிடைக்கும்.பொதுவாக நாம் டிக்கெட் முன் பதிவு செய்ய ஆன்லைனில் வங்கிகளின் வாயிலாக பணபட்ரிமாற்றம் செய்வோம் அந்த முறையில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு டிக்கெட்டை ரத்து செய்வதால், பணம் திரும்ப பெறுவதில் 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை ஆகும்
ஆனால் நாம் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் அதன் செயலியில், 'ஐபே' எனும் புதிய வசதிமூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் ஒன்று முதல் மூன்று நாட்களில் பணத்தை திரும்ப பெறலாம்.மற்ற வங்கிகளின் பரிவர்த்தனைகளை ஒப்பிடுகையில், பயணியருக்கு தாமதம் இன்றி பணம் திரும்ப கிடைக்கும்.
Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி