Breaking News

ராஜ்யசபா எம்.பி.யாக இளையராஜா நியமனம்.... பிரதமர் மோடி வாழ்த்து

அட்மின் மீடியா
0

 ராஜ்யசபா எம்.பி.யாக இளையராஜா நியமனம்.... பிரதமர் மோடி வாழ்த்து


இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். 

இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு, இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 25 சனவரி 2018 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசைமைப்பாளர் இளையராஜா மற்றும் பி.டி. உஷா ஆகியோரை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷா ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜா நியமனம் குறித்து பிரதமர் தன் டிவிட்டர் பக்கத்தில்

தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர் இளையராஜா என்றும் அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. அவரது வாழ்க்கைப் பயணம் சமமாக ஊக்கமளிக்கிறது – அவர் ஒரு தாழ்மையான பின்னணியில் இருந்து உயர்ந்து இவ்வளவு சாதித்துள்ளார். அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ட்வீட் செய்துள்ளார்.




Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback