தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை - மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக எந்த முன் அனுமதியும் பெறவில்லை எனவேவிதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு மெட்ரிகுலேசன், சிபிஎஸ்இ நர்சரி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார். கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்கம் அறிவித்துள்ளது.
கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது எனனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் கருப்பு பேட்ச் அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கவும் முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில்நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக எந்த முன் அனுமதியும் பெறவில்லை எனவேவிதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை
Tags: தமிழக செய்திகள்