Breaking News

இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்க நியமனம்

அட்மின் மீடியா
0

இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை கோத்தபய ராஜபக்சே நியமனம் செய்துள்ளார்.



இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலையை பிரகடனம் செய்தார். மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனே பதவி விலகக்கோரி போராட்டம் தொடர்வதால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை கோத்தபய ராஜபக்சே நியமனம் செய்துள்ளார்.

இலங்கையில் இருந்து தப்பி மாலத்தீவில் தஞ்சமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கவை  அறிவித்துள்ளார். 

ரணிலை இடைக்கால ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக சபாநாயகரிடம் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே செயல்படுவார் என கோத்தபய ராஜபக்சே தன்னிடம் தெரிவித்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback