Breaking News

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் சென்னை மாநகராட்சி

அட்மின் மீடியா
0

பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 2500 கடந்து தினமும் பதிவாகி கொண்டு வருகிறது.

சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாதவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.இதனை தடுக்கும் விதமாக சென்னை பெருநகர மாநகராட்சி முககவசம் அணியா விட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. 

அதன்படி பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் என்று அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback