Breaking News

காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- 144 தடை உத்தரவு

அட்மின் மீடியா
0

காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காரைக்கால் பகுதியில் சமீபகாலமாக கடுமையான வயிற்றுப்போக்கு நோய்தொற்று அதிக அளவில் பதிவாகி வருகின்றன, மேலும் தினசரி மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் என்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் வயிற்றுப்போக்கு நோய்/காலரா நோயை” காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.



இந்நிலையில் காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலாக்க உள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

அதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. விடுதிகள், மண்டபங்கள், உணவகங்கள், கல்விக்கூடங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட்டுள்ளார். மேலும் காலரா பாதித்தோருக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மேலும் புதுச்சேரியைச் சேர்ந்த சுகாதாரக் குழுபொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், பின்வருவனவற்றைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அறிவித்துள்ளது

போதுமான அளவு கொதிக்கவைத்த தண்ணீரை (20 நிமிடங்கள் கொதிக்கவைத்து) குடிக்கவும்.

பொது இடங்கள் மற்றும் ஹோட்டல்களில் பாதுகாப்பான குடிநீரை உட்கொள்வதை உறுதி செய்யவும்.

கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும்.•

பொதுக் கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்தவும், திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கவும்.

உங்களுக்கு வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அல்லது வாந்தி எடுத்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கவும்.

அக்கம்பக்கத்தினர் / மூத்த குடிமக்கள் யாராவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கவும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback