ஒரு ஷேர் ஆட்டோவில் 27 பேர் பயணம்.. இந்த வீடியோவை நீங்களே பாருங்க..
உத்தரப்பிரதேசத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவை போக்குவரத்து போலீசார் நிறுத்துகின்றார்கள். அந்த ஆட்டோவில் உள்ள பயணிகள் கீழே இறங்குகின்றார்கள் அதில் டிரைவர் உட்பட 27 பேர் இறங்கு கின்றார்கள் அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது
உத்தரப் பிரதேச மாநிலம் பிந்தி கோட்வாலி மற்றும் ஃபதேபூர் இடையே ஒரு ஆட்டோவை போக்குவரத்து காவல்துறையினர் நிறுத்துகின்றார்கள் உள்ளே இருப்பவர்களை இறங்கச் சொல்லி போலீஸார் கூற 6 பேர் அமரக்கூடிய அந்த ஆட்டோவுக்குள் ஓட்டுநர் உள்பட 27 பேர் இருந்தனர்.
முதலில் ஓட்டுநர் பகுதியில் வெளியில் இருந்து வரும் ஒருவர், கூடவே ஒரு சிறுவனையும் வெளியில் இழுத்துப் போடுகிறார். அதன் பின்னர் குழந்தைகள், பெரியவர்கள் என அடுத்தடுத்து வரிசையாக இறங்குகின்றனர். ஆட்டோவை தடுத்து நிறுத்திய காவலர், ‘ஒன்று, இரண்டு'.. என ஆட்டோவில் இருந்து இறங்குபவர்களை எண்ணுகிறார். இறுதியில் அந்த ஆட்டோவில் டிரைவர் உட்பட 27 பேர் பயணம் செய்துள்லார்கள்
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ