சரவணா கோல்டு பேலஸ் ரூ.234.75 கோடி சொத்துக்கள் முடக்கம் ..!
சென்னையில் சரவணா கோல்டு பேலஸ் கடைக்கு சொந்தமான ரூ.ரூ.234.75 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை.
சென்னையில் சரவணா கோல்டு பேலஸ் கடைக்கு சொந்தமான ரூ.ரூ.234.75 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.இந்தியன் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளது. பண மோசடி திட்டத்தின் கீழ் சரவணா கோல்டு பேலஸ் கடையில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.
இந்தியன் வங்கியில் பெறப்பட்ட கடன் தொகைக்கு சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தியன் வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டது கடந்த ஜனவரி மாதம் சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான 2 கடைகளில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து கடைகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டது.இதையடுத்து, சிபிசிஐடி பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான அசையா சொத்துகள் ரூ.234.75 கோடியை அமலாக்கத் துறை நேற்று முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து, விசாரணை நடந்து வருவதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்