Breaking News

பக்ரீத் முன்னிட்டு 11-ம் தேதி பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் .. ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி அவர்கள் முதல்வருக்கு கோரிக்கை..!

அட்மின் மீடியா
0

பக்ரீத் பண்டிகைக்கு மறுநாள் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என, ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



இதுகுறித்து, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விடுத்துள்ள செய்தி குறிப்பில், 

வருகிற10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பல்வேறு பணிகள் நிமித்தம் வெளியூர்களில் வசிக்கும் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பக்ரீத் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.அப்படி வெளியூர்களுக்குச் செல்பவர்கள் மீண்டும் அவர்கள் தங்கியுள்ள ஊர்களுக்கு திரும்பும் வகையில் மறுநாளான 11-ம் தேதி (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளித்தால் அவர்களின் சிரமம் குறையும்.எனவே, பக்ரீத் பண்டிகையின் மறுநாளான 11-ம் தேதி பொது விடுமுறை அளிக்க தமிழக முதல்வர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback