Breaking News

FACT CHECK: முஸ்லீம்கள் தேசிய கொடியை எரித்தார்கள் என பரவும் புகைப்படம்?? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இந்த மண்ணில் பிறந்து, இந்நாட்டில் வாழ்ந்து, பாரதம் தந்த அத்தனை பயன்களையும் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டின் கொடியை ஒரு உண்மையான குடிமகனால் எரிக்க முடியாது… பெற்றதாயும் தாய்நாடும் ஒன்றுதான் என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-

இந்த மண்ணில் பிறந்து, இந்நாட்டில் வாழ்ந்து, பாரதம் தந்த அத்தனை பயன்களையும் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டின் கொடியை ஒரு உண்மையான குடிமகனால் எரிக்க முடியாது… பெற்றதாயும் தாய்நாடும் ஒன்றுதான் என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.


உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த புகைப்படத்தை ஆராய்ந்தது, மேலும் அந்த புகைப்படத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் இந்தியாவில் நடந்தது இல்லை  மாறாக ஜூன் மாதம் 9ம் தேதி பாகிஸ்தானில் நடந்தது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 


முழு விவரம்:-

பாஜக தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் குறித்து சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சர்வதேச நாடுகளிலிருந்தும் நூபுர் ஷர்மாவுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தநிலையில் அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்தது. மேலும் இந்தியா மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளிலும் இஸ்லாமியர்கள் நூபுர் ஷர்மாவைக் கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றார்கள்

அதேபோல் ஜூன் 9-ம் தேதி இறைத்தூதர் நபிகள் நாயகம் பற்றி அவதூறு பரப்பிய நுபுர்சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி பாகிஸ்தானில் நடைபெற்ற போராட்டம் நடந்தது

அப்போரட்டத்தில் இந்திய தேசியக் கொடி எரிக்கப்பட்டதாக ஏபி நியூஸ் இணையதளத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படத்தில் உள்ள பேனரில் Ulama-e-nizamia pak  எனும் அமைப்பின் பெயர் இடம்பெற்று இருக்கிறது.


முடிவு:-


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://apnews.com/article/politics-new-delhi-india-pakistan-narendra-modi-a81c00817a178d3ecab29a59c23d5edc

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback