சென்னை விமான நிலையத்தில் முககவசம் கட்டாயம் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்..!!
தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது இதனால் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் இன்றுமுதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது
பயணிகள் முகக்கவசம் இல்லாமல் விமானத்தில் ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
பயணிகள் அனைவரும் 2 தவனை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றுடன் விமானத்தில் பயணிக்க வேண்டும்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரூ.500 விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்தில் அனைத்து பகுதியிலும் 'நோ மாஸ்க், நோ எண்ட்ரி' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன
Tags: தமிழக செய்திகள்