Breaking News

நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பிய நூபுர் ஷர்மாவை கைது செய்யகோரி டெல்லி ஜும்மா மசூதி முன் போராட்டம்

அட்மின் மீடியா
0

பாஜக தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் குறித்து சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

சர்வதேச நாடுகளிலிருந்தும் நூபுர் ஷர்மாவுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தநிலையில் அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், இன்று (ஜூன் 10) டெல்லியில் உள்ள ஜமா மசூதியில் தொழுகை முடித்து வெளியில் வந்த ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி நூபுர் ஷர்மாவைக் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நூபுர் ஷர்மாவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், கண்டன கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback