அக்னிபாத் திட்டத்திற்க்கு எதிர்ப்பு பீகாரில் பாஜக அலுவலகம், துணை முதல்வர் வீடு, பாஜக தலைவர் வீடுகள் மீது தீ வைத்த போராட்டக்காரர்கள்! வீடியோ
பீகாரின் மந்திபூரா பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைமூர் மாவட்டம் பபுவா நகரில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று சப்ரா ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்ஜினுக்கு போராட்டக்கார்கள் தீ வைத்தனர்.
ஆரா ரயில் நிலையத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் மேசை, நாற்காலிகளை வீசியெறிந்து தீ வைத்து கொளுத்தினர். அதைத்தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வட மாநிலங்கள் முழுக்க பற்றி எறிவதால், போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த பிகார் துணை முதலமைச்சர் ரேணு தேவியின் வீடும் பேதியா எனும் ஊரில் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளது மேலும் ரேணு தேவி தற்போது தலைநகர் பட்னாவில் உள்ளார் என்று அவரது மகன் தெரிவித்துள்ளார்.அதைப் போல பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் வீட்டையும் போராட்டக்காரர்கள் தாக்கினர். பிகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ரயில் தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் டயர் ஒன்றையும் தண்டவாளத்தில் வைத்து எரித்துள்ளனர்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ