சினிமாவில் வருவது போல் காவல் ஆய்வாளரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற நபர்...சிசிடிவி வீடியோ
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நூறநாடு போலிஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமாரை வெட்டி கொலை செய்வதற்காக சுகதன் என்ற நபர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயலும் போது...சுதாரித்துக்கொண்ட அருண்குமார், அவரிடம் போராடி அவர் கையில் இருந்து அரிவாளை லாவகமாக பிடுங்கி கைது செய்த CCTV காட்சி வைரலாகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழாபகுதியில் உள்ள நூறநாடு பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணி செய்து வருபவர் அருண் குமார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆய்வாளர் அருண் குமாரின் காரை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து காவல் ஆய்வாளர் அவரை வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட அருண்குமார் அவரிடம் போராடி அவர் கையில் இருந்து கத்தியை பிடிங்கினார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அருண்குமார் அந்த நபரை கைது செய்தார். விசாரணையில் அவர் அதே பகுதியை சார்ந்த சுகதன் என்பது தெரியவந்துள்ளது. காவல் ஆய்வாளர் அருண்குமாரை வெட்டி கொலை செய்ய முயலும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ