கும்பகோணம் அன்னை கல்வி குழுமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்லூரி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது இந்தியாவில், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், கோவிலாச்சேரியில் அமைந்துள்ள ஒரு கல்லூரியாகும். இக்கல்லூரி திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றது ஆகும்
கும்பகோணம் அன்னை கல்வி குழுமம் மற்றும் K.K.O. அறக்கட்டளையின் சார்பாக வருடந்தோரும் இஸ்லாமிய சமுதாயத்தில் பொருளாதார சூழ்நிலையில் பின்தங்கிய, கல்வியில் நல்ல ஆர்வம் உள்ள மாணவ மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றார்கள்
இந்த கல்வியாண்டு 2022-23 ல் கும்பகோணம் அன்னை கல்வி குழுமத்தில்
1. அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
2. அன்னை பொறியியல் கல்லூரி
3. அன்னை பல்தொழில்நுட்பக் கல்லூரி
4. அன்னை கல்வியியல் கல்லூரி
5. அன்னை செவிலியர் கல்லூரி
6. அன்னை இயற்கை மற்றும் யோகக் கல்லூரி
7. அன்னை பாரா மெடிக்கல் கல்லூரி
8. அன்னை துணை செவிலியர் பட்டயப் கல்லூரி
9. அன்னை பிசியோதெரபி கல்லூரி மற்றும் DMLT
10. ஆக்குபேஷன் தெரபி கல்லூரி
ஆகியவற்றில் மொத்தமாக 500 க்கும் மேற்பட்ட இலவச சீட்டுகளையும் இவற்றுடன் விருப்பமுள்ள மாணவிகளுக்கு ஆலிமா படிப்பையும் சேர்த்து வழங்கி வருகின்றார்கள்
குறிப்பு:-
விடுதிக் கட்டணம்,
தேர்வுக் கட்டணம்,
அரசு, பல்கலைக்கழக கட்டணங்களை மட்டும் மாணவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும்
இக்கல்லூரியில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணபபிக்கலாம்
முன்னால் வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்!!
எனவே பொருளாதார சூழலில் பின்தங்கியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
மேலும் விவரங்களுக்கு:-
மவ்லவி.நிஸார் அஹமது பிலாலி M.A.அரபித்துறை,
அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கும்பகோணம்.
செல்: +91 8248349564
செல்: +91 7708097997
இதை அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் பகிர்ந்து தகுதியுள்ள மாணவர்களை பயன்பெறச் செய்வோம் இன்ஷா அல்லாஹ்!
Tags: கல்வி செய்திகள்