வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு- மத்திய அரசு அறிவிப்பு
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தன் டிவிட்டர் பதிவில்: தேர்தல் ஆணைய ஆலோசனை படி தேர்தல் சட்டத்தின் சில முக்கிய அம்சங்கள் அமலுக்கு வருகின்றன.
இதன்படி, ஒருவரின் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை தடுக்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்படும்.
ஆண்டுதோறும் ஜன.,1 ல் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதன் பின் 18 வயது பூர்த்தியானோர், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஓராண்டு காத்திருக்க நேர்கிறது. அதனால் இனி,
ஜனவரி மாதம் 1 ம் தேதி
ஏப்ரல் மாதம் 1 ம் தேதி=
ஜூலை மாதம் 1 ம் தேதி
அக்டோபர் மாதம் 1 ம் தேதி
ஆகிய தேதிகளில், 18 வயது பூர்த்தியானவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளும் நடைமுறை அறிமுகமாகிறது.
வெளிநாடுகளில் உள்ள இந்திய துாதரகங்களில் பணியாற்றுவோர், எல்லைகளில் காவல் காக்கும் ராணுவ வீரர்கள் ஆகியோர் சேவைப் பிரிவு வாக்காளர்களாக கருதப்படுவர்.
அடுத்து, வாக்களிப்பதில் பாலின சமத்துவ உரிமையை அளிக்க, மனைவி என்ற சொல்லுக்கு பதிலாக துணைவர் என்ற சொல் பயன்படுத்தப்படும். இதனால், சேவைப் பிரிவினரில் கணவன் அல்லது மனைவி சார்பில் பரஸ்பரம் ஓட்டு போட முடியும்.
Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி