Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

காஞ்சிபுரம் மாவட்ட காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவிப்பு

 


 
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாவட்ட காஜி நியமனம் செய்யப்பட உள்ளது. காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆலிம் படிப்பு அல்லது பாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய சட்ட சாத்திரத்தில்; புலமை பெற்றவர்கள் அல்லது அரபு கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.

காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் மேற்கண்ட தகுதியுடையவர்களாக இருப்பின் விண்ணப்பங்கள் மற்றும் சுயவிவரம் குறித்த விவரங்களை எழுத்து மூலமாக உரிய சான்றுகளுடன் 10.07.2022-க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேலும், கூடுதல் விவரங்கள் தேவையெனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback