மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கோவையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கிருமி நாசினி வைக்கவும், காய்ச்சல் பரிசோதனை செய்யவும் உத்தவிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்கவும் அம்மாவட்ட சுகாதாரத்துறைக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கிருமி நாசினி வைக்கவும், காய்ச்சல் பரிசோதனை செய்யவும் உத்தவிடப்பட்டுள்ளது.
Tags: கொரானா செய்திகள் தமிழக செய்திகள்