நெல்லை அருகே சோகம்: காருக்குள் விளையாடிக்கொண்டிருந்த 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி
நெல்லை அருகே சோகம்: காருக்குள் விளையாடிக்கொண்டிருந்த 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் தனது வீட்டின் அருகே உறவினரின் காருக்குள் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த 3 சிறுமிகள் மூச்சுத்திணறி பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பணகுடி அருகே லெப்பைக் குடியிருப்பை சார்ந்த நாகராஜன் மகன் நித்திரை(7) மகள் நிதிஷா(5) மற்றும் சுதாகரின் மகன் கபிலன்(4) ஆகியோரின் மூன்று குழந்தைகள் அங்கே நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் சென்று விளையாடினர். பழுதாகி நின்ற அந்த காரை உள்ளே இருந்து திறக்கமுடியாது எனக் கூறப்படுகிறது; ஆனால் வெளியே இருந்து திறக்கலாம் கதவை திறக்க முயன்றபோது கதவை திறக்க தெரியாததினால் மூச்சுத்திணறி காருக்குள்ளே உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது சம்பந்தமாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்