Breaking News

தமிழகத்தில் 26 பேருக்கு எஸ்பியாக பதவி உயர்வு தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 26 பேருக்கு எஸ்பியாக பதவி உயர்வு அளித்து மற்றும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



தமிழகத்தில் 26 கூடுதல் எஸ்.பிக்களை எஸ்பி களாக பதவி உயர்வு அளித்து பணியிடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை நவீனமயமாக்கல் பிரிவு அதிகாரியை,கரூர் காகித நிறுவன ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் அகத்தின் கீழ் செயல்படும், இந்த கொளத்தூர் காவல் மாவட்டத்திற்கு துணை ஆணையராக ராஜா ராம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

புக்யா சினேகப்ரியா எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சிறப்பு காவல்படை மதுரை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையராக ராஜாராம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கரூர் செய்தித்தாள் நிறுவன ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக பண்டிகங்காதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள பள்ளிகரணை துணை ஆணையராக ஜோஸ் தங்கையா, மதுரை மாநகர காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையராக வனிதா, சென்னை காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு 2 துணை ஆணையராக சக்திவேல், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் ஆரோக்கியம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி, சேலம் நகர தெற்கு துணை ஆணையர் லாவண்யா, திருச்சி நகர தெற்கு துணை ஆணையர் ஸ்ரீதேவி உள்ளிட்ட 27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback