Breaking News

20 ம்தேதி முதல் நீதிமன்றத்தில் முகக்கவசம் கட்டாயம் – உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரானா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது இதனால்,மக்கள் கூட்டம் அதிமுகமுள்ள இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் எதிர் வரும் திங்கட்கிழமை(ஜூன் 20) முதல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும்,வழக்கு விசாரணைக்கு தொடர்பில்லாத நபர்கள் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும்,நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback