இனி 18 வயது கீழ் உள்ளவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த முடியாது- வந்தாச்சு புது அப்டேட்
சமூக வலைதள செயலிகள் சிறுவர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. ஆனால் பல சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பதற்காக புதிய அப்டேட் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
18 வயது நிரம்பாத சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பதற்காக புதிய அப்டேட் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் முகத்தை ஸ்கேன் செய்து வயதினை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக சரியான வயதை கணிக்கும் பிரத்யேக ஸ்கேன் வசதியை இன்ஸ்டா ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் செல்ஃபி போட்டோ மற்றும் வீடியோவையும் எடுத்து அனுப்ப வேண்டும்.
அதேபோல் இந்தியாவில் 18 வயதினை கடந்த மூன்று பேரை மியூச்சுவல் நண்பர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.
Tags: தொழில்நுட்பம்