பள்ளி கல்வித்துறையில் 11 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் முழு விவரம்..
பள்ளி கல்வித்துறையில் 11 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் முழு விவரம்..
தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறையில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 11 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரை முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சுவாமிநாதன், சிவகங்கை முதன்மை கல்வி அலுவலராகவும்,
நீலகிரி முதன்மை கல்வி அலுவலர் நசருதீன், திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலராகவும்,
திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குன ராகவும்,
சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலராகவும்,
புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் நிர்வாக அலுவலராகவும்,
சென்னை தொடக்கக்கல்வி இயக்ககம் துணை இயக்குனர் (நிர்வாகம்) வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலராகவும்,
காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, திருப்பூர் முதன்மை கல்வி அலுவலராகவும்
நாமக்கல் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ராமன், திருவள்ளூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராகவும்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, மதுரை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராகவும்,
செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் தாமோதரன், நீலகிரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராகவும்,
நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர் விஜயா, சென்னை தொடக்கக் கல்வி இயக்ககம் துணை இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்