பொதுதேர்வில் பங்கேற்க்காத 10 ம் வகுப்பு 12, ம் வகுப்பு மாணவிகளுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடிதேர்வு!!
அட்மின் மீடியா
0
பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடிதேர்வு வைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மேலும் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மானவ மாணவிகளுக்கு ஜூலை 25ம் தேதி முதல் உடனடி தேர்வு தொடங்கும் எனவும்அதேபோல் 10ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் உடனடி தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்