FIR உள்ள நபர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க எந்த தடையும் இல்லை உயர் நீதிமன்றம்
அட்மின் மீடியா
0
குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நிலுவையில் உள்ள நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் எந்த தடையும் இல்லை எனவும் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலை இருந்தால் மட்டும் நீதிமன்றத்தின் உத்தரவு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நிலுவையில் உள்ள நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் எந்த தடையும் இல்லை எனவும் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலை
இருந்தால் மட்டும் நீதிமன்றத்தின் உத்தரவு தேவை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
திருச்சியைச்சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் தான் மலேசியாவில் தொழில் தொழில் புரிந்துவருவதாகவும், தன்னுடைய
பாஸ்போஸ்ட் தொலைந்துவிட்ட நிலையில் தமக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும்
என மலேசியா இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அப்துல்லா கடந்த
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு திருச்சியில் இருந்த போது சில குற்ற
வழக்குகளில் சம்பந்தப்பட்டதாக கூறி தூதரகம் பாஸ்போர்ட் வழங்க அனுமதி
மறுத்துள்ளது
இதனைத்தொடர்ந்து இந்திய தூதரகம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்
இந்த மனு மாண்புமிகு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அதில்
ஒருவர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு முதல் தகவல்
அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இருந்தால் பாஸ்போர்ட் வழங்க எவ்வித
தடையும் இல்லை என உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதே சமயம் வழக்கில் இறுதி
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலை இருந்தால் மட்டுமே நீதிமன்றத்தின்
உத்தரவு தேவை என்றும் கூறியுள்ளார்.
F.I.R என்றால் என்ன ?
First Information Report என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது காவல் துறை குற்றத்தை பதிவு செய்யும் ஆவணம் ஆகும். முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தபின்பு தான் புலன்விசாரணை தொடங்கவேண்டும்
Tags: தமிழக செய்திகள்